Advertisement

தக்காளி விலை மீண்டும் அதிகரிப்பு

By: vaithegi Fri, 27 Oct 2023 12:28:03 PM

தக்காளி விலை மீண்டும் அதிகரிப்பு


சென்னை: இன்று கிலோ தக்காளி ரூ.10 உயர்வு ..தமிழகத்தில் தக்காளி விலையானது கடந்த 2 மாதங்களுக்கு முன் உச்சத்தை தொட்டது. அதாவது இதுவரை இல்லாத அளவில் 1 கிலோ ரூ.200க்கு விற்பனை செய்யப்பட்டது. அரசு தக்காளி விலையை குறைக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்தது.

அதிலும் குறிப்பாக ரேஷன் கடைகளில் மலிவு விலையில் தக்காளியை விற்பனை செய்தது. இந்த நிலையில் கடந்த மாதம் தக்காளி வரத்து அதிகரித்ததை தொடர்ந்து விலை அதிரடியாக குறைந்தது.

tomato price,ration shop ,தக்காளி விலை ,ரேஷன் கடை


எனவே அதன் படி நேற்று வரை ஒரு கிலோ ரூ.20க்கு விற்பனை செய்யப்பட்டது. ஆனால் இன்று சென்னை கோயம்பேடு மொத்த விற்பனையில் தக்காளி விலை ரூ.10 அதிகரித்துள்ளது. மேலும் வரத்து குறைவால் தக்காளி 1 கிலோ ரூ.30க்கு விற்பனை செய்யப்படுகிறது.

அதே போன்று வரத்து குறைவால் வெங்காயம் விலையும் கணிசமாக அதிகரித்துள்ளது. அதன் படி ஒரு கிலோ வெங்காயம் ரூ.65க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Tags :