Advertisement

உற்பத்தி குறைபாடு காரணத்தால் டொயோட்டா கார்களை திரும்ப பெற திட்டம்

By: Nagaraj Wed, 12 July 2023 11:34:15 PM

உற்பத்தி குறைபாடு காரணத்தால் டொயோட்டா கார்களை திரும்ப பெற திட்டம்

நியூயார்க்: கார்களை திரும்ப பெற முடிவு... உற்பத்தி குறைபாடு காரணமாக ஆயிரக்கணக்கான toyota கார்களை திரும்பப் பெற அந்நிறுவனம் முடிவு செய்துள்ளது.

yaris ரக கார்களே இவ்வாறு திரும்பப் பெற முடிவு செய்யப்பட்டுள்ளது. 2020 மற்றும் 2023 க்கு இடையில் தயாரிக்கப்பட்ட பல toyota yaris பெட்ரோல் மற்றும் ஹைபிரிட் வகை கார்கள் திரும்ப பெறப்படவுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

cars,manufacturing defect,overseas,inspection,recall ,கார்கள், உற்பத்தி குறைபாடு, வெளிநாடு, பரிசோதனை, திரும்ப பெறுதல்

அந்தந்த கார் வகைகளின் சமநிலை தொடர்பான உற்பத்தி குறைபாடு காரணமாக வாகனங்கள் திரும்பப் பெறப்பட்டுள்ளதாக அந்த செய்திகள் மேலும் தெரிவிக்கின்றன.

இதேவேளை குறித்த காலப்பகுதியில் உற்பத்தி செய்யப்பட்ட கார்களை பயன்படுத்துவோர் இருப்பின் அவர்களை பரிசோதிக்குமாறு toyota வை மேற்கோள்காட்டி வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

அந்த வகையைச் சேர்ந்த சுமார் 7633 கார்கள் பாதிக்கப்படும் என வெளிநாட்டு ஊடகங்கள் மேலும் தெரிவித்துள்ளன

Tags :
|