Advertisement

அல்ட்ராவயலெட் நிறுவனத்திற்கு ரூ. 30 கோடியை முதலீடு செய்த டிவிஎஸ் மோட்டார் கம்பெனி!

By: Monisha Fri, 04 Sept 2020 5:55:18 PM

அல்ட்ராவயலெட் நிறுவனத்திற்கு ரூ. 30 கோடியை முதலீடு செய்த டிவிஎஸ் மோட்டார் கம்பெனி!

பெங்களூரை சேர்ந்த எலெக்ட்ரிக் வாகன உற்பத்தியாளரான, அல்ட்ராவயலெட் ஆட்டோமோட்டிவ் டிவிஎஸ் மோட்டார் கம்பெனியிடம் இருந்து முதலீடு பெற்று இருக்கிறது. அல்ட்ராவயலெட் நிறுவனத்திற்கு டிவிஎஸ் நிறுவனம் ரூ. 30 கோடியை முதலீடு செய்துள்ளது.

அல்ட்ராவயலெட் நிறுவனம் கடந்த ஆண்டு எஃப்77 பெர்ஃபார்மன்ஸ் எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிளை அறிமுகம் செய்தது. இதன் விலை ரூ. 3 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டு இருக்கிறது.

ultraviolet,tvs motor,investment,electric motorcycle ,அல்ட்ராவயலெட்,டிவிஎஸ் மோட்டார்,முதலீடு,எலெக்ட்ரிக் மோட்டார்சைக்கிள்

இந்த மோட்டார்சைக்கிள் 33.5 பிஹெச்பி பவர், 90 என்எம் டார்க் செயல்திறன் வழங்கும் மோட்டார் கொண்டுள்ளது. அல்ட்ராவயலெட் எஃப்77 மாடல் மணிக்கு 0 முதல் 100 கிலோமீட்டர் வேகத்தை வெறும் 2.9 நொடிகளில் எட்டிவிடும் திறன் கொண்டுள்ளது.

மேலும் இந்த மோட்டார்சைக்கிள் மணிக்கு 147 கிலோமீட்டர் வேகத்தில் செல்லும். இதில் உள்ள பேட்டரியை ஒருமுறை சார்ஜ் செய்தால் 150 கிலோமீட்டர் வரை செல்லும். இதில் மொத்தம் மூன்று பேட்டரி பேக்குகள் வழங்கப்பட்டு உள்ளன.

Tags :