Advertisement

கொரோனா வைரஸ் பாதிப்பால் மோட்டார்சைக்கிளின் விலையை உயர்த்திய டிவிஎஸ் மோட்டார்!

By: Monisha Thu, 28 May 2020 6:17:32 PM

கொரோனா வைரஸ் பாதிப்பால் மோட்டார்சைக்கிளின் விலையை உயர்த்திய டிவிஎஸ் மோட்டார்!

இந்தியாவில் கடந்த ஆண்டு நவம்பர் மாத வாக்கில் அறிமுகம் செய்யப்பட்ட அபாச்சி ஆர்டிஆர் 160 4வி மற்றும் ஆர்டிஆர் 200 4வி மோட்டார்சைக்கிள் மாடல்களுக்கு டிவிஎஸ் மோட்டார் கம்பெனி விலையை உயர்த்தி இருக்கிறது.

கொரோனா வைரஸ் பாதிப்பால் ஏற்பட்ட இழப்புகளை எதிர்கொள்ளவே விலை உயர்வு அறிவிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. தற்சமயம் பிஎஸ்6 ஆர்டிஆர் 160 மாடல் விலை ரூ. 2 ஆயிரமும், ஆர்டிஆர் 200 சீரிஸ் விலை ரூ. 2500 வரை உயர்த்தப்பட்டுள்ளது. அனைத்து விலைகளும் எக்ஸ் ஷோரூம் அடிப்படையில் குறிப்பிடப்பட்டுள்ளன.

india,corona virus,tvs motor,price increase,apache rtr 160 4v ,இந்தியா,கொரோனா வைரஸ்,டிவிஎஸ் மோட்டார்,விலை உயர்வு,அபாச்சி ஆர்டிஆர் 160 4வி

2020 டிவிஎஸ் அபாச்சி ஆர்டிஆர் 200 4வி மாடில் 197.75 சிசி, சிங்கிள் சிலிண்டர், 4 வால்வு, ஆயில் கூல்டு என்ஜின் மற்றும் 5 ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்பட்டுள்ளது. இந்த என்ஜின் 20.2 பிஹெச்பி பவர், 16.8 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது.

2020 டிவிஎஸ் அபாச்சி ஆர்டிஆர் 160 4வி மாடலில் 159.7 சிசி, சிங்கிள் சிலிண்டர், 4 வால்வு, ஆயில் கூல்டு என்ஜின் மற்றும் 5 ஸ்பீடு கியர்பாக்ஸ் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்த என்ஜின் 15.8 பிஹெச்பி பவர், 14.12 என்எம் டார்க் செயல்திறன் வழங்குகிறது.

Tags :
|