Advertisement

பெட்ரோல், டீசல் விலை குறைய வாய்ப்புள்ளதாக மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் அறிவிப்பு

By: vaithegi Sun, 11 June 2023 4:17:35 PM

பெட்ரோல், டீசல் விலை குறைய வாய்ப்புள்ளதாக மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் அறிவிப்பு

இந்தியா: இந்தியாவில் சர்வதேச சந்தையில் கச்சா எண்ணைய்யின் விலையேற்றத்தை பொறுத்து மட்டுமே உள்நாட்டில் பெட்ரோல், டீசலின் விலை நிர்ணயம் செய்யப்பட்டு கொண்டு வருகிறது.

அந்த வகையில் கடந்த 2021-ஆம் ஆண்டு தமிழகத்தில் திடீரென பெட்ரோலின் விலை லிட்டருக்கு 110.85 ரூபாய்க்கும், டீசல் விலை லிட்டருக்கு 102.51 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வந்தது.

இதன் பின் பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரியின் அடிப்படையில் பெட்ரோல் மற்றும் டீசலின் விலை குறைக்கப்பட்டது. அதாவது, பெட்ரோல் லிட்டருக்கு 102.63 ரூபாய்க்கும், டீசல் லிட்டருக்கு 94.24 க்கும் நிர்ணயம் செய்யப்பட்டது.

petrol,diesel price,petroleum minister ,பெட்ரோல், டீசல் விலை ,பெட்ரோலியத் துறை அமைச்சர்

அதன் பின்னர், பெட்ரோல் மற்றும் டீசலின் விலை கடந்த 1 ஆண்டுகளுக்கும் மேலாக எவ்வித மாற்றமும் இல்லாமல் அதே விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இந்த நிலையில், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெயின் விலை சீராக இருந்தால் அடுத்த காலாண்டில் பெட்ரோல் மற்றும் டீசலின் விலை குறைப்பது பெற்றி எண்ணெய் நிறுவனங்கள் பரிசீலனை செய்யும் என்று மத்திய பெட்ரோலியத் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி தெரிவித்து உள்ளார்.

Tags :
|