Advertisement

தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம் குறித்த அப்டேட் வெளியீடு

By: vaithegi Thu, 14 Sept 2023 1:37:56 PM

தங்கம் மற்றும் வெள்ளி விலை நிலவரம் குறித்த அப்டேட் வெளியீடு

சென்னை: இரண்டாவது நாளாக தங்கம் விலையில் மாற்றம் இல்லை ... தமிழகத்தில் கடந்த சில நாட்களாக தங்கம் விலை அதிகரித்த நிலையில் தற்போது விலை சற்று குறைய தொடங்கி இருக்கிறது.

இதையடுத்து நேற்று (செப். 13) தங்கம் விலை குறைந்து கிராம் ரூ. 5480க்கு விற்பனை செய்யப்பட்டது. அந்த வகையில் இன்று தங்கம் விலையில் எந்த மாற்றமும் இல்லாமல் இருக்கிறது. எனவே அதன் படி 1 கிராம் தங்கம் ரூ. 5480க்கும் ஒரு சவரன் தங்கம் ரூ.43840க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

gold,silver ,தங்கம் ,வெள்ளி


அதே போன்று 24 காரட் சுத்தமான தங்கம் விலை ஒரு கிராம் ரூ.5950க்கும் ஒரு சவரன் ரூ.47600க்கு விற்பனை செய்யப்படுகிறது.

மேலும் வெள்ளி விலையிலும் மாற்றம் இல்லை. அதன் படி 1 கிராம் வெள்ளி ரூ 77க்கும், 1 கிலோ வெள்ளி ரூ.77000க்கும் விற்பனை செய்யப்படுகிறது. தொடர்ந்து தங்கம் வெள்ளி விலை குறைவதால் பொதுமக்கள் நிம்மதியில் இருக்கின்றனர்.

Tags :
|