Advertisement

போஸ்ட்பெயிட் சலுகை கட்டணங்களில் இந்தியாவில் திடீர் மாற்றம் செய்த வி நிறுவனம்

By: Karunakaran Thu, 03 Dec 2020 1:16:28 PM

போஸ்ட்பெயிட் சலுகை கட்டணங்களில் இந்தியாவில் திடீர் மாற்றம் செய்த வி நிறுவனம்

வி நிறுவனம் தனது என்ட்ரி லெவல் போஸ்ட்பெயிட் சலுகை விலையை உயர்த்தியுள்ளது. இந்த விலை உயர்வு கடந்த ஆண்டு அறிவிக்கப்பட்ட ரூ. 598 மற்றும் ரூ. 749 ரெட் போஸ்ட்பெயிட் சலுகைகளுக்கு பொருந்தும். இந்த இரு சலுகைகளின் விலையும் ரூ. 50 அதிகரிக்கப்பட்டு உள்ளது. இரு சலுகைகளும் ஒற்றை போஸ்ட்பெயிட் சலுகையில் ஒன்றுக்கும் மேற்பட்ட இணைப்புகள் வழங்கப்படுகின்றன.

வி ரூ. 598 சலுகையில் இரு இணைப்புகளையும், ரூ. 749 சலுகையில் மூன்று இணைப்புகள் வரை பயன்படுத்த முடியும். புதிய விலை உயர்வு மை வி வலைதளத்தில் ஏற்கனவே மாற்றப்பட்டுவிட்டது. வி அதிகாரப்பூர்வ வலைதளத்தின் படி வி ரூ. 598 சலுகை விலை ரூ. 649 என்றும், ரூ. 749 சலுகை விலை ரூ. 799 என்றும் உயர்த்தப்பட்டு இருக்கின்றன.

vi,postpaid,offer fees,india ,வி, போஸ்ட்பெய்ட், சலுகை கட்டணம், இந்தியா

ரூ. 749 சலுகையில் 80 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. இதில் பிரைமரி இணைப்பிற்கு 50 ஜிபி டேட்டாவும், இரண்டாவது இணைப்பிற்கு 30 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. ரூ. 799 போஸ்ட்பெயிட் சலுகையில் 120 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது. இதில் பிரைமரி இணைப்பிற்கு 60 ஜிபி டேட்டா, இரண்டாவது இணைப்புகளுக்கு முறையே 30 ஜிபி டேட்டா வழங்கப்படுகிறது.

என்ட்ரி லெவல் போஸ்ட்பெயிட் சலுகைகளில் வி பிரைமரி இணைப்பிற்கு 200 ஜிபி வரை டேட்டா ரோல் ஒவர் வசதியை வழங்குகிறது. இரண்டாவது இணைப்புகளுக்கு 50 ஜிபி வரை டேட்டா ரோல் ஒவர் வசதி வழங்கப்படுகிறது. இத்துடன் அன்லிமிட்டெட் வாய்ஸ் கால், தினமும் 100 எஸ்எம்எஸ் வழங்கப்படுகிறது.

Tags :
|