Advertisement

காய்கறிகள் ஒரே நாளில் விலை உயர்வு

By: vaithegi Thu, 26 Oct 2023 10:43:44 AM

காய்கறிகள் ஒரே நாளில் விலை உயர்வு

சென்னை: கோயம்பேடு காய்கறி மார்க்கெட் சென்னை மக்களின் காய்கறி தேவையை பூர்த்தி செய்யும் முக்கிய சந்தையாக விளங்குகிறது. இங்கிருந்து தான் சென்னை மற்றும் புறநகர் பகுதிகளுக்கு காய்கறி சப்ளை செய்யப்படுகிறது.

மேலும் கர்நாடகா, கேரளா, மகாராஷ்டிரா, மத்திய பிரதேசம் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்து காய்கறிகள் லாரிகள் மூலம் கொண்டு வரப்படுகின்றன. காய்கறிகள் வரத்து அதிகரிக்கும் போது விலை குறைவது, வரத்து குறையும் போது விலை அதிகரிப்பதும் வாடிக்கையான ஒன்று.

vegetables,market,sale ,காய்கறிகள் ,சந்தை, விற்பனை


இந்த நிலையில் சென்னை கோயம்பேடு மார்க்கெட்டில் வரத்து குறைவு காரணமாக காய்கறிகள் ஒரே நாளில் விலை அதிகரித்துள்ளது. அதன்படி 1 கிலோ தக்காளி ரூ. 15 உயர்ந்து மொத்த விற்பனையில் ரூ. 25க்கும்,

இதனை அடுத்து சில்லறை விற்பனையில் ரூ.30க்கும் விற்பனை சின்ன வெங்காயம் நேற்று ரூ.60 க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில், இன்று ரூ. 120 க்கு விற்பனையாகிறது. பெரிய வெங்காயம் ரூ. 65, பீன்ஸ் ரூ. 120க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Tags :
|