Advertisement

விவோ எக்ஸ்50 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் ஜூலை 16 ஆம் தேதி அறிமுகம்!

By: Monisha Mon, 13 July 2020 6:01:31 PM

விவோ எக்ஸ்50 சீரிஸ் ஸ்மார்ட்போன்கள் ஜூலை 16 ஆம் தேதி அறிமுகம்!

இந்திய சந்தையில் விவோ நிறுவனம் தனது எக்ஸ்50 சீரிஸ் ஸ்மார்ட்போன்களை ஜூலை 16 ஆம் தேதி அறிமுகம் செய்யப்படும் என அதிகாரப்பூர்வமாக அறிவித்து இருக்கிறது. புதிய ஸ்மார்ட்போன் சீரிஸ் அறிமுக நிகழ்வு ஜூலை 16, மதியம் 12 மணிக்கு துவங்க இருக்கிறது.

முன்னதாக விவோ எக்ஸ்50 சீரிஸ் ஸ்மார்ட்போன் மாடல்கள் விவோ எக்ஸ்50, எக்ஸ்50 ப்ரோ மற்றும் எக்ஸ்50 ப்ரோ பிளஸ் சீன சந்தையில் அறிமுகம் செய்யப்பட்டன. இதைத் தொடர்ந்து இவற்றின் இந்திய வெளியீட்டை உறுதிப்படுத்தும் டீசரினை விவோ இந்தியா வெளியிட்டது.

vivo,x50 series,smartphone,indian market ,விவோ,எக்ஸ்50 சீரிஸ்,ஸ்மார்ட்போன்,இந்திய சந்தை

விவோ டீசரின் படி புதிய விவோ எக்ஸ்50 சீரிஸ் ஸ்மார்ட்போனின் கேமரா அதிநவீன அம்சங்களை வழங்கும் என தெரியவந்துள்ளது. எனினும், விவோ எக்ஸ்50, எக்ஸ்50 ப்ரோ மற்றும் எக்ஸ்50 ப்ரோ பிளஸ் என மூன்று மாடல்களையும் இந்தியாவில் அறிமுகம் செய்யுமா என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.

விவோ எக்ஸ்50 ப்ரோ ஸ்மார்ட்போன் ஃபிளாக்ஷிப் தர பிரைமரி கேமரா கொண்டிருக்கிறது. இத்துடன் விவோ எக்ஸ்50 சீரிஸ் ஸ்மார்ட்போன்களில் 5ஜி வசதி வழங்கப்பட்டுள்ளன. இவற்றில் ஸ்னாப்டிராகன் 765ஜி சிப்செட் வழங்கப்பட்டுள்ளன. விவோ எக்ஸ்50 ப்ரோ பிளஸ் மாடலில் ஸ்னாப்டிராகன் 865 பிராசஸர் வழங்கப்பட்டுள்ளது.

Tags :
|