Advertisement

விவோ எக்ஸ் சீரிஸ் ஸ்மார்ட்போன் விற்பனை ஜூலை 24 ஆம் தேதி துவங்குகிறது!

By: Monisha Thu, 16 July 2020 6:31:35 PM

விவோ எக்ஸ் சீரிஸ் ஸ்மார்ட்போன் விற்பனை ஜூலை 24 ஆம் தேதி துவங்குகிறது!

விவோ நிறுவனம் ஏற்கனவே அறிவித்தப்படி இந்திய சந்தையில் விவோ எக்ஸ்50 மற்றும் எக்ஸ்50 ப்ரோ ஸ்மார்ட்போன் மாடல்களை அறிமுகம் செய்தது. விவோ எக்ஸ்50 மற்றும் எக்ஸ்50 ப்ரோ ஸ்மார்ட்போன்களில் 6.56 இன்ச் FHD+AMOLED ஸ்கிரீன், இன்டிஸ்ப்ளே கைரேகை சென்சார், 32 எம்பி செல்ஃபி கேமரா வழங்கப்பட்டுள்ளது.

விவோ எக்ஸ்50 ஸ்மார்ட்போன் ஃபிராஸ்ட் புளூ மற்றும் கிளேஸ் பிளாக் நிறங்களில் கிடைக்கிறது. இந்தியாவில் இதன் 8 ஜிபி ரேம், 128 ஜிபி மாடல் விலை ரூ. 34990 என்றும் 12 ஜிபி ரேம், 256 ஜிபி மாடல் விலை ரூ. 37990 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. விவோ எக்ஸ்50 ப்ரோ ஸ்மார்ட்போன் ஆல்ஃபா கிரே நிறத்தில் கிடைக்கிறது. இதன் 8 ஜிபி ரேம், 256 ஜிபி மெமரி மாடல் விலை ரூ. 49990 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.

இரு ஸ்மார்ட்போன்களின் விற்பனை அமேசான் மற்றும் ப்ளிப்கார்ட் தளங்களில் ஜூலை 24 ஆம் தேதி துவங்குகிறது. இவற்றுக்கான முன்பதிவு ஜூலை 16 ஆம் தேதி துவங்குகிறது.

vivo,x series,smartphone,sales ,விவோ,எக்ஸ் சீரிஸ்,ஸ்மார்ட்போன்,விற்பனை

விவோ எக்ஸ்50 மற்றும் எக்ஸ்50 ப்ரோ சிறப்பம்சங்கள்
- 6.56 இன்ச் 2376×1080 பிக்சல் FHD+ 19.8:9 E3 AMOLED டிஸ்ப்ளே
- எக்ஸ்50 — ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 730 பிராசஸர், அட்ரினோ 618 GPU
- எக்ஸ்50 ப்ரோ — ஆக்டாகோர் ஸ்னாப்டிராகன் 765ஜி பிராசஸர், அட்ரினோ 620 GPU
- 8 ஜிபி LPDDR4X ரேம்
- 128 ஜிபி (UFS 2.1) / 256 ஜிபி (UFS 2.1) மெமரி
- ஆண்ட்ராய்டு 10 மற்றும் ஃபன்டச் ஒஎஸ் 10.5
- டூயல் சிம்
- எக்ஸ்50 — 48 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி ஃபிளாஷ், f/1.6, OIS
- 8 எம்பி 120° அல்ட்ரா வைடு லென்ஸ், f/2.2
- 13 எம்பி போர்டிரெயிட் கேமரா, f/2.48
- 5 எம்பி சூப்பர் மேக்ரோ கேமரா, f/2.48
- எக்ஸ்50 ப்ரோ — 48 எம்பி பிரைமரி கேமரா, எல்இடி ஃபிளாஷ், f/1.6
- 8 எம்பி 120° அல்ட்ரா வைடு லென்ஸ், f/2.2, 2.5cm மேக்ரோ
- 8 எம்பி பெரிஸ்கோப் கேமரா, f/3.4
- 13 எம்பி போர்டிரெயிட் கேமரா, f/2.46
- 32 எம்பி செல்ஃபி கேமரா, f/2.48
- இன் டிஸ்ப்ளே கைரேகை சென்சார்
- யுஎஸ்பி டைப்-சி ஆடியோ
- 5ஜி SA/ NSA (எக்ஸ்50 ப்ரோ மாடலில் மட்டும்), டூயல் 4ஜி வோல்ட்இ, வைபை, ப்ளூடூத் 5.1
- யுஎஸ்பி டைப்-சி
- எக்ஸ்50 — 4200எம்ஏஹெச் பேட்டரி, 33 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங்
- எக்ஸ்50 ப்ரோ — 4315எம்ஏஹெச் பேட்டரி, 33 வாட் ஃபாஸ்ட் சார்ஜிங்

Tags :
|