Advertisement

போர் எதிரொலி .. தங்கம் விலை அதிகரிப்பு

By: vaithegi Sun, 08 Oct 2023 10:41:29 AM

போர் எதிரொலி .. தங்கம் விலை அதிகரிப்பு

சென்னை: இஸ்ரேல் - பாலஸ்தீனம் போர் எதிரொலியாக, தங்கம் விலை ஒரே நாளில் பவுனுக்கு ரூ.680 அதிகரித்து ரூ.42,960-க்கு விற்பனை...

சர்வதேச பொருளாதார நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் தங்கத்தின் விலையில் அவ்வப்போது மாற்றம் ஏற்பட்டு உயர்ந்தும், குறைந்தும் விற்பனையாகி கொண்டு வருகிறது.தங்கம் விலை கடந்த ஜுன் மாதம் 4-ம் தேதி பவுனுக்கு ரூ.46 ஆயிரம் என அதிகரித்து புதிய உச்சத்தை அடைந்தது. பின்னர், தங்கம் விலை படிப்படியாக குறைந்தது.

gold price,israel,palestine ,தங்கம் விலை,இஸ்ரேல், பாலஸ்தீனம்


இந்த மாதம் 6-ம் தேதி தங்கம் விலை பவுன் ரூ.42,280-க்கு விற்பனையானது. தங்கம் விலை குறையத் தொடங்கியதைக் கண்டு நகை வாங்குவோர் மகிழ்ச்சி அடைந்தனர். ஆனால், அவர்களது மகிழ்ச்சி ஓரிரு நாட்கள் கூட நீடிக்கவில்லை.

இஸ்ரேல் - பாலஸ்தீனம் இடையே ஏற்பட்டுள்ள போர் பதற்றம் காரணமாக, தங்கம் விலை நேற்று அதிகரித்தது.எனவே இதன்படி, தங்கம் கிராம் ஒன்றுக்கு ரூ.85 அதிகரித்து ரூ.5,370-க்கும், பவுனுக்கு ரூ.680 அதிகரித்து ரூ.42,960-க்கும் விற்பனையானது.

Tags :
|