Advertisement

தீபாவளி பண்டிகையையொட்டி களைகட்டும் தங்கம், வாகன விற்பனை

By: vaithegi Sat, 11 Nov 2023 09:29:36 AM

தீபாவளி பண்டிகையையொட்டி களைகட்டும் தங்கம், வாகன விற்பனை


சென்னை: தீபாவளி விற்பனை தொடங்கியதிலிருந்து தற்போது வரை தங்கம், வெள்ளி விற்பனை விறுவிறுப்பாக நடைபெற்றது. நவம்பர் 16 வரையிலான இன்னும் 6 நாட்களில் பொருட்களின் விற்பனை இன்னும் சிறப்பாக இருக்கும் என்று வணிகர்கள் நம்பிக்கை தெரிவித்து உள்ளனர்.

அதிலும் குறிப்பாக தங்கம் விற்பனை கடந்த ஆண்டைவிட இந்தாண்டு தங்கம் விற்பனை 20 சதவீதம் உயர வாய்ப்பு உள்ளதாக விற்பனையாளர்கள் தெரிவிக்கின்றனர். தீபாவளியை முன்னிட்டு இந்தியா முழுவதும் 30 ஆயிரம் கோடி மதிப்புக்கு தங்கம், வெள்ளி விற்பனையாகி உள்ளதாக வணிகர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

sale,gold,vehicle,silver ,விற்பனை,தங்கம், வாகன,வெள்ளி


அந்த வகையில் தந்தேரா தினத்தில் தங்கம், வெள்ளி விற்பனை 2 மடங்கு உயர்ந்துள்ளது. 41 டன் தங்கம், 40 டன் வெள்ளி விற்பனையாகிவுள்ளதாக வணிகர் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.இதேபோன்று தந்தேரா தினமான நேற்று மட்டும் 5 ஆயிரம் வாகனங்களை மாருதி சுசூகி நிறுவனம் விற்பனை செய்துள்ளது.

கடந்தாண்டு தந்தேரா தினத்தில் 32 ஆயிரம் வாகனங்களை விற்பனை செய்த மாருதி சுசூகி, இந்தாண்டு 55 ஆயிரம் வாகனங்களை விற்பனை செய்துள்ளது. ஹூண்டாய் நிறுவனம் 10 ஆயிரத்து 30க்கும் அதிகமான வாகனங்களை விற்பனை செய்துள்ளது. இது கடந்தாண்டை விட 2 மடங்காகும்.

Tags :
|
|