Advertisement

பெணகளுக்கு அதிக லாபம் தரும் தொழில்கள் என்னென்ன ?

By: Karunakaran Wed, 04 Nov 2020 12:41:50 PM

பெணகளுக்கு அதிக லாபம் தரும் தொழில்கள் என்னென்ன ?

தொழில்துறையில் நுழைந்து, உச்சம் தொட்டு கோடிகளை சம்பாதித்து வாழ்க்கையில் வெற்றி பெற, தொழில் செய்வது, எப்படி செய்வது, எந்த தொழிலில் அதிக லாபம் கிடைக்கும் என்பன போன்ற யுக்திகளை கண்டறிவதுதான் முதல்படி. மிகக்குறைந்த முதலீட்டில், அதிக லாபம் தரும் தொழிலாக இருக்கவேண்டும் என்பதே அனைவரின் தொழில் திட்டமாக இருக்கும். வீட்டில் இருந்தே எளிய முறையில் மெழுகுவர்த்தி தயாரிப்புத் தொழிலைத் தொடங்கலாம். பண்டிகைக் காலங்களில் மெழுகுவர்த்திகளுக்கு மிகவும் கிராக்கி ஏற்படும். குறைந்தபட்சம் ரூ.20 ஆயிரம் முதல் 30 வரை முதலீடு செய்தாலே போதும்.

இந்தியாவில் உள்ள வீடுகளில் குறைந்தபட்சம் ஏதேனும் ஓர் ஊறுகாயாவது கட்டாயம் உணவில் பயன்படுத்துவார்கள். எனவே சிறுதொழிலாக ஊறுகாய் தயாரிப்பை தொடங்குபவர்களுக்கு இது மிகுந்த பாதுகாப்பாக தொழில் மட்டுமன்றி எளிமையான தொழிலும் கூட. குறைந்தபட்சம் ரூ.20 ஆயிரம் இருந்தாலே போது, ஊறுகாய் தயாரிப்புத் தொழிலில் துணிந்து இறங்கலாம். அனைத்து மத வழிபாடுகளிலும் முக்கியத்துவம் வாய்ந்தவை ஊதுபத்திகளாகும். மிக எளிய முறையில் வீட்டிலேயே குடிசைத் தொழில் போல இந்த ஊதுபத்தி தயாரிப்புத் தொழிலை மேற்கொள்ளலாம். ஆட்டோமேட்டிக், செமி ஆட்டோமேட்டிக் ஊதிபத்தி தயாரிப்பு இயந்திரங்கள் ரூ.50 ஆயிரம் முதல் சந்தைகளில் கிடைக்கின்றன.

most lucrative businesses,women,candles,pickle ,இலாபகரமான வணிகங்கள், பெண்கள், மெழுகுவர்த்திகள், ஊறுகாய்

கோன் ஐஸ் என பிரபலமாக அழைக்கப்படும் ஐஸ்கிரீம் வகையில் ஐஸ்கிரீமை நிரப்ப பயன்படுத்தும் பிஸ்கட் கோன் தயாரிப்பு நல்ல லாபம் அளிக்கும் தொழிலாகும். இதைத் தயாரிப்பதற்கான இயந்திரத்தின் விலை சுமார் ரூ.1 லட்சம் முதல் 1.5 லட்சம் வரைதான். இதையே முக்கியத் தொழிலாக மொத்தமாக உற்பத்தி செய்து விற்பனை செய்ய விரும்பினால் முதலீடு சற்று கூடும். அப்பளம் தயாரித்தல் மிகவும் எளிய வீட்டிலேயே செய்யக்கூடிய குடிசைத் தொழிலாகும். இதிலும் உளுந்து அப்பளம், கிழங்கு அப்பளம், அரிசி அப்பளம், கோதுமை அப்பளம் என பல்வேறு வகைகள் உள்ளன. சிறு தொழிலாக செய்பவர்கள் சுமார் ரூ.30 ஆயிரம் முதலீட்டில் எளிய முறையில் வீட்டிலேயே தயாரித்து, பேக்கிங் செய்து அருகில் உள்ள கடைகளில் விற்பனை செய்து நல்ல லாபம் ஈட்டலாம்.

காதுகள் சுத்தம் செய்யும் காட்டன் பட்ஸ் தயாரிப்பு மிகவும் சுலபமான தொழில். வீட்டில் இருந்தே அதற்குத் தேவையான பொருட்களை வரவழைத்து தயார் செய்யலாம். காட்டன் பஞ்சு, குச்சிகள் மற்றும் பேக்கிங் செய்யும் பொருட்கள் இருந்தால் போதும். இதை தயார் செய்ய சிறிய இயந்திரங்கள் உள்ளன. காட்டன் பட்ஸ் தயாரிக்கும் தொழில் தொடங்க குறைந்தது 20ஆயிரம் ரூபாய் முதல் 40ஆயிரம் ரூபாய் இருந்தால் போதுமானது.

Tags :
|