Advertisement

தொழிற்சாலைகள் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை வழிமுறை

By: Nagaraj Sun, 10 May 2020 3:15:02 PM

தொழிற்சாலைகள் மேற்கொள்ள வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கை வழிமுறை

புதுடில்லி: இப்படித்தான் இருக்க வேண்டும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.

ஊரடங்கிற்கு பின்னர் தொழிற்சாலைகள் திறக்கப்படும் போது, மேற்கொள்ளப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை குறித்த வழிமுறைகளை மத்திய அரசு வெளியிட்டுள்ளது. இது தொடர்பாக தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் சார்பில் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு அனுப்பிய சுற்றறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:


factories,33 per cent,report,practice,gap ,தொழிற்சாலைகள், 33 சதவீதம் பேர், அறிக்கை, நடைமுறை, இடைவெளி

ஊரடங்கு காலத்தில் தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளன. இதனால், தொழிற்சாலைகளில் சரியாக பராமரிப்பு பணிகள் நடந்திருக்க முடியாது. இதனால், உற்பத்தி பிரிவுகள், பைப்லைன்களில் ரசாயனங்கள் படிந்திருப்பது, அச்சுறுத்தலை ஏற்படுத்தியுள்ளது. ஆபத்தான ரசாயனம் மற்றும் தீப்பிடிக்ககூடிய பொருட்கள் வைக்கப்பட்டுள்ள இடங்களுக்கும் பொருந்தும்.

தொழிற்சாலைகளை திறக்கும் போது முதல் வாரத்தை சோதனை காலமாக கருத வேண்டும். அனைத்து பாதுகாப்பு வழிமுறைகளும் உறுதி செய்யப்பட வேண்டும். தொழிற்சாலையை துவங்கிய உடனே, அதிக உற்பத்தி இலக்கை எட்ட வேண்டும் என முயற்சி செய்யக்கூடாது. தொழிற்சாலை வளாகங்களை 24 மணி நேரமும் தூய்மையாக வைத்து கொள்ளும் வகையில், 2 அல்லது 3 மணி நேரத்திற்கு ஒரு முறை தூய்மைபடுத்த வேண்டும்.

சாப்பிடும் அறை, மேஜைகளை, ஒவ்வொரு முறை பயன்படுத்தி முடிந்த பின்பு தூய்மைப்படுத்த வேண்டும். தொழிற்சாலைகளில் அபாயத்தை குறைக்கும் வகையில், தொழிலாளர்கள் பயன்படுத்தும் குறிப்பிட்ட கருவிகளில் கவனம் செலுத்த வேண்டும்.

factories,33 per cent,report,practice,gap ,தொழிற்சாலைகள், 33 சதவீதம் பேர், அறிக்கை, நடைமுறை, இடைவெளி

அதில் வழக்கத்திற்கு மாறான சத்தம், வாசனை, காலாவதியான வயர்கள், கசிவு, புகை ஏற்படுவது கண்டறிந்தால், உடனடியாக பராமரிப்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும். தேவைப்பட்டால், தொழிற்சாலையை மூட வேண்டும். ஊழியர்களுக்கு தினமும் இரண்டு முறை உடல்வெப்பநிலையை பரிசோதனை செய்ய வேண்டும். அறிகுறி ஏதும் தெரிந்தால், தொழிலாளர்களை வேலை செய்ய அனுமதிக்கக்கூடாது.

வாரத்தில் 24 மணி நேரம் செயல்படும் தொழிற்சாலைகளில், ஒவ்வொரு ஷிப்ட் முடிந்த பின்னர் ஒரு மணி நேரம் இடைவெளி விட வேண்டும். இதில், தொடர்ச்சியாக பணியாற்ற வேண்டிய துறைகளுக்கு விலக்கு அளிக்கப்படுகிறது. தொழிற்சாலைகளில் நிர்வாகப்பிரிவில் பணிபுரிபவர்களில் 33 சதவீதம் பேர் பணியாற்றலாம். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

Tags :
|