Advertisement

நேற்று வரை தங்கம் விலை குறைந்த நிலையில் தற்போது ஒரே நாளில் இவ்வளவு உயர்வு

By: vaithegi Sat, 05 Nov 2022 1:11:01 PM

நேற்று வரை தங்கம் விலை குறைந்த நிலையில் தற்போது ஒரே நாளில்  இவ்வளவு உயர்வு

சென்னை: இன்று ஒரே நாளில் தங்கம் விலை ரூ. 424 அதிகரிப்பு ..... நேற்றைய நிலவரப்படி தங்கம் விலை குறைந்த நிலையில், இன்று அதிரடியாக கிடு கிடுவென தங்கம் விலை அதிகரித்துள்ளது. அதனால் நகை வாங்க திட்டமிட்டு வந்தவர்கள் சற்று அதிர்ச்சியில் இருக்கின்றனர்.

அந்த வகையில் சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை நேற்று மாலை நிலவரப்படி கிராம் ரூ.4,717க்கு விற்பனை செய்யப்பட்டது. மேலும் ஒரு சவரன் தங்கமானது ரூ.37,736க்கு விற்பனை செய்யப்பட்டது.

gold price,chennai ,தங்கம் விலை,சென்னை

இதையடுத்து இந்த நிலையில் இன்று ( நவ. 5) 22 காரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ. 424 அதிகரித்து, ரூ.38,160 விற்பனை செய்யப்படுகிறது. மேலும் .கோவை, திருச்சி, வேலூர் மாவட்டத்தில் தங்கம் கிராம் ரூ.4,770க்கு விற்பனை செய்யப்படுகிறது.

நேற்று வரை தங்கம் விலை குறைந்த நிலையில் தற்போது ஒரே நாளில் ரூ. 424 அதிகரித்துள்ளதால் பொதுமக்கள் அதிர்ச்சியில் இருக்கின்றனர். மேலும் அது மட்டுமில்லாமல் வெள்ளி விலையும் திடீரென கிராமுக்கு ஒரு ரூபாய் 90 பைசா உயர்ந்து, ரூ.66.30 க்கு விற்பனை செய்யப்படுகிறது. கிலோவுக்கு ரூ.1,900 அதிகரித்து, ரூ.66,300க்கு விற்பனை செய்யப்படுகிறது.

Tags :