Advertisement

சிலிண்டரின் விலையை போல பெட்ரோல், டீசலின் விலையும் குறைக்கப்படுமா?

By: vaithegi Sat, 16 Sept 2023 1:20:09 PM

சிலிண்டரின் விலையை போல பெட்ரோல், டீசலின் விலையும் குறைக்கப்படுமா?

சென்னை: இந்தியாவில் கச்சா எண்ணையின் விலை மற்றும் ஏற்றுமதி, இறக்குமதி ஆகிவற்றைப் பொறுத்து ஒவ்வொரு ஆண்டும் பெட்ரோல், டீசலின் விலை நிர்ணயம் செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில், கடந்த 2021-ம் ஆண்டு திடீரென பெட்ரோல், டீசலின் விலை உயர்த்தப்பட்டு பெட்ரோல் விலை லிட்டருக்கும், டீசலின் விலை லிட்டருக்கு ரூ. 102.59க்கும் விற்பனை செய்யப்பட்டு வந்தது.

இதன் பின் நீண்ட கோரிக்கைகளுக்கு பிறகு பெட்ரோல் மற்றும் டீசல் மீதான கலால் வரி அடிப்படையில் பெட்ரோல், டீசலின் விலை குறைக்கப்பட்டது.

petrol,diesel price , பெட்ரோல், டீசலின்விலை

அதாவது, பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.102.63-க்கும், டீசலின் விலை லிட்டருக்கு ரூ.94.24 க்கும் விற்பனை செய்யப்பட்டு வந்தது. இதன் பின் தற்போது வரையிலும் பெட்ரோல், டீசல் விலையில் எவ்வித மாற்றமும் செய்யப்படாமல் அதே விலையில் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

இதற்க்கு இடையே, மத்திய அரசு வீட்டு உபயோக மற்றும் வணிக உபயோகத்திற்கான சிலிண்டரின் விலையை ரூ. 200 குறைத்து இருந்தது. எனவே அதன்படி பெட்ரோல், டீசலின் விலையும் குறைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், இன்று 483 வது நாளாக பெட்ரோல், டீசலின் விலையில் மாற்றம் இல்லாமல் அதே விலையில் விற்பனை செய்யப்பட்டு கொண்டு வருகிறது.

Tags :
|