Advertisement

பெட்ரோல், டீசலின் விலை குறையுமா?

By: vaithegi Mon, 27 Nov 2023 4:57:20 PM

பெட்ரோல், டீசலின் விலை குறையுமா?

சென்னை: சர்வதேச சந்தையில் பெட்ரோல், டீசலின் ஏற்ற இறக்கம், சரக்கு கட்டணம், உள்ளூர் வரி போன்றவற்றின் அடிப்படையில் பெட்ரோல், டீசலின் விலை நிர்ணயம் செய்யப்பட்டு வருகிறது.

அந்த வகையில், ஒவ்வொரு ஆண்டும் பெட்ரோல், டீசலின் விலை தொடர்ந்து அதிகரித்து வருகிறது. உள்நாட்டில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ. 102.63 க்கும், டீசல் லிட்டருக்கு ரூ. 94.24 க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

troll,diesel price,sale ,ட்ரோல், டீசலின் விலை,விற்பனை

இந்த நிலையில், இந்தியாவில் தீபாவளி பரிசாக சிலிண்டர் விலை குறைக்கப்பட்டதை போலன்று பெட்ரோல், டீசலின் விலையும் குறைக்கப்படும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், மத்திய அரசு பெட்ரோல், டீசல் விலை குறித்த எவ்வித மாற்றத்தையும் அறிவிக்கவில்லை.

இந்நிலையில், இந்தியாவில் அடுத்தாண்டு தேர்தல் நடைபெற இருக்கும் நிலையில் நிச்சயமாக புத்தாண்டையொட்டி பெட்ரோல், டீசலின் விலை குறைக்கப்படும் என வாகன ஓட்டிகள் கடும் எதிர்பார்ப்பில் உள்ளனர்.

Tags :
|