Advertisement

பெண்கள் மனம் கவர்ந்த காட்டன் சுடிதார்கள்... விற்பனையிலும் முதலிடம்

By: Nagaraj Tue, 08 Nov 2022 6:42:01 PM

பெண்கள் மனம் கவர்ந்த காட்டன் சுடிதார்கள்... விற்பனையிலும் முதலிடம்

சென்னை: தினந்தோறும் அணிவதற்கு ஏற்றவை என்று காட்டன் சுடிதார்களைச் சொல்லலாம். இது போன்ற சுடிதார்களை பெண்கள் மிகவும் விரும்புவதற்குக் காரணம் அவை மிகவும் டீசண்ட் மற்றும் கவர்ச்சிகரமான தோற்றத்தை தருகிறது. சுடிதார் பேண்ட்டுடன் ஸ்லிம்ஃபிட் டாப்பை அணியும் பொழுது அணிபவரை ஒல்லியாகவும், அழகாகவும் காட்டுகின்றது.

அலுவலகம் குடும்ப விழாக்கள் மற்றும் பார்ட்டிகளுக்கு இது போன்றே காட்டன் சுடிதார்களை பெண்கள் அணிகிறார்கள்.
காட்டன் சில்க் சுடிதார்: காட்டன் சில்க் துணியானது மிகவும் ரிச்சான தோற்றத்தை தருகின்றது. இதுபோன்ற சில்க் காட்டனில் உடல்வாகிற்கு ஏற்றாற் போல் தைத்து அணியப்படும் சுடிதார்கள் பளபளப்பாகவும், ஆடம்பரமாகவும் கல்யாணம், வரவேற்பு போன்ற விசேஷங்களுக்கு அணிந்து செல்லக்கூடிய வகையில் மிகவும் அற்புதமாகவும் இருக்கின்றன.

appearance,suditaar,full length,full sleeve suditaar,ribbon border ,தோற்றம், சுடிதார், முழுக்கை, ஃபுல் ஸ்லீவ் சுடிதார், ரிப்பன் பார்டர்

டிசைனர் காட்டன் சுடிதார்: டிசைனர் சுடிதார்கள் மேல் டாப்பானது பெரும்பாலும் மிக அழகிய வேலைபாட்டுடனும் கீழ் பேன்டானது பிளெயின் துணியாகவும் இருக்கும். பெரும்பாலும் மேல் டாப்பில் அழகிய எம்ப்ராய்டரி வேலைப்பாடு, மிரர் வொர்க் வேலைப்பாடு அல்லது அழகிய கற்கள் மணிகளைக் கொண்டு தைத்தும் மிக அழகான டிசைன் செய்யப்பட்டிருக்கும். இது போன்ற சுடிதார் மற்றும் டிசைனர் செட் என்றால் முழுக்கை வைப்பதே மிகவும் சூட்டாகும்.

ஹைகலார் டிசைனர் ஃபுல் ஸ்லீவ் சுடிதார்: ஹைகாலரில் ரிப்பன் பார்டர் மற்றும் பீட் வொர்க் செய்யப்பட்டு முழுக்கையின் மேற்புறம் தோள்பட்டையிலிருந்து மணிக்கட்டு வரை ரிப்பன் பார்டர் மற்றும் பீட் வொர்க் செய்யப்பட்டு வரும் துணிகளே மிகவும் ட்ரெண்டியாக உள்ளன எனலாம். இவற்றை நம் உடல்வாகிற்கு ஏற்றார்போல் மிகவும் ஃபிட்டாக தைத்து அத்துடன் ஹைஹீல்ஸ் செப்பலை அணிந்தால் உங்களது தோற்றம் அனைவரையும் பார்க்க தூண்டும்.

Tags :