Advertisement

ரெட்மி நோட் 10 சீரிஸ் மாடல்களை உருவாக்கும் பணியில் சியோமி!

By: Monisha Sat, 03 Oct 2020 6:31:20 PM

ரெட்மி நோட் 10 சீரிஸ் மாடல்களை உருவாக்கும் பணியில் சியோமி!

சியோமியின் ரெட்மி பிராண்டு நோட் 10 சீரிஸ் மாடல்களை உருவாக்கும் பணிகளில் ஈடுபட்டு வருகிறது. ஏற்கனவே இந்த சீரிஸ் பற்றிய விவரங்கள் இணையத்தில் வெளியாக துவங்கி விட்டது.

தற்சமயம் வெளியாகி இருக்கும் தகவல்களில் ரெட்மி நோட் 10 ஸ்மார்ட்போன் 5ஜி கனெக்டிவிட்டி கொண்டிருக்கும் என தெரியவந்துள்ளது. முந்தைய ரெட்மி நோட் 9 ப்ரோ ஸ்மார்ட்போனில் ஸ்னாப்டிராகன் 720ஜி பிராசஸர் வழங்கப்பட்டு இருந்த நிலையில், புதிய நோட் 10 சீரிஸ் ஸ்னாப்டிராகன் 750ஜி பிராசஸர் கொண்டிருக்கும் என கூறப்படுகிறது.

xiaomi,redmi brand,note 10 series,5g connectivity ,சியோமி,ரெட்மி பிராண்டு,நோட் 10 சீரிஸ்,5ஜி கனெக்டிவிட்டி

ஸ்னாப்டிராகன் 750ஜி மற்றும் ஸ்னாப்டிராகன் 865 பிராசஸர் கொண்ட இரு ஸ்மார்ட்போன்களை ரெட்மி உருவாக்கி வருவதாக தகவல் வெளியாகி உள்ளது. மேலும் இரு மாடல்களிலும் பெரிய டிஸ்ப்ளே மற்றும் பெரிய பேட்டரிகள் வழங்கப்படலாம் என தெரிகிறது.

5ஜி வசதி வழங்கப்படும் பட்சத்தில் ரெட்மி நோட் 10 சீரிஸ் விலை உயர்வதற்கான வாய்ப்புகள் இருப்பதால், இந்த ஆண்டு நோட் 10 ஸ்மார்ட்போன் சீனாவில் மட்டும் அறிமுகம் செய்யப்படலாம் என கூறப்படுகிறது. இரண்டு புதிய ஸ்மார்ட்போன்களும் முதற்கட்டமாக சீன சந்தையில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது.

Tags :
|