Advertisement

பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிலவரம்

By: Monisha Thu, 18 June 2020 10:28:48 AM

பெட்ரோல் மற்றும் டீசல் விலை நிலவரம்

கொரோனா வைரஸ் பரவலை அடுத்து பல நாடுகளில் பொருளாதார நடவடிக்கை வேகமெடுத்து இருப்பதால், பெட்ரோலியக் கச்சா எண்ணெய்க்கான தேவை திடீரென அதிகரித்துள்ளது. இதனால், சர்வேதச சந்தையில் கச்சா எண்ணெய் விலை அதிகரித்து வருகிறது.

கடந்த 7ம் தேதி முதல் பெட்ரோல் டீசல் விலை தினந்தோறும் உயர்த்தப்பட்டு வருகிறது. இந்நிலையில், 12வது நாளாக இன்றும் பெட்ரோல், டீசல் விலையை எண்ணெய் நிறுவனங்கள் உயர்த்தி உள்ளன.

petrol,diesel,price hike,delhi,chennai ,பெட்ரோல்,டீசல்,விலை உயர்வு,டெல்லி,சென்னை

சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 46 காசுகள் உயர்ந்து 81 ரூபாய் 32 காசுகளுக்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. டீசல் விலை லிட்டருக்கு 54 காசுகள் உயர்ந்து, 74 ரூபாய் 23 காசுகளுக்கும் விற்பனை செய்யப்படுகிறது. இந்த 12 நாட்களில் மட்டும் பெட்ரோல் லிட்டருக்கு 5 ரூபாய் 78 காசுகளும், டீசல் 6 ரூபாய் 1 காசும் உயர்ந்துள்ளன.

டெல்லியில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.77.81 ஆகவும், டீசல் ரூ.76.43 ஆகவும், மும்பையில் பெட்ரோல் விலை ரூ.84.15, டீசல் விலை ரூ.74.32, கொல்கத்தாவில் பெட்ரோல் ரூ.79.08, டீசல் ரூ.71.38 என்ற அளவிலும் விற்பனை ஆகிறது.

Tags :
|
|
|